• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-03-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
களனி, கட்புல மற்றும் ஆற்றுகைக் கலைகள், மொறட்டுவ, ரஜரட்ட, ஶ்ரீ ஜயவர்த்தனபுர, கொழும்பு ஆகிய பல்கலைக்கழகங்களிலும் கொழும்பு பல்கலைக்கழகத்திலும் கணனி கற்கை நிறுவனங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல்
- நாட்டின் பொருளாதாரத்தில் நிலவும் அபிவிருத்தி தேவைகளுக்கும் சர்வதேச தொழில் சந்தைக்கும் ஏற்ற தொழில்சார் மற்றும் திறமையான பட்டதாரிகளை உருவாக்குவதற்கு பல்கலைக்கழகங்களினதும் உயர் கல்வி நிறுவனங்களினதும் உட்கட்டமைப்பு வசதிகளை விருத்தி செய்வது அத்தியாவசிய விடயமொன்றாகும். இதற்கமைவாக, களனி, கட்புல மற்றும் ஆற்றுகைக் கலைகள், மொறட்டுவ, ரஜரட்ட, ஶ்ரீ ஜயவர்த்தனபுர, கொழும்பு ஆகிய பல்கலைக்கழகங்களிலும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் கணனி கற்கை நிறுவனங்களின் உத்தேச உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்யும் ஒன்பது (09) கருத்திட்டங்கள் 1706.9 மில்லியன் ரூபாவைக் கொண்ட முதலீட்டில் 2016 - 2019 காலப்பகுதிக்குள் நடைமுறைப்படுத்தும் பொருட்டு உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.