• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-03-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மொறகஹகந்த நீர்த்தேக்கத்தின் பிரதான வேலைகளின் வடிவமைப்பு மீளாய்வு மற்றும் நிருமாண மேற்பார்வை ஆகியவற்றுக்கான மதியுரை சேவை ஒப்பந்தம்
- கமத்தொழில் நடவடிக்கைகளுக்கு நீர் வழங்குதல், மின்சாரம் வழங்குதல் மற்றும் பிரதேச வாழ் மக்களினது வாழ்வாதார அபிவிருத்திக்கு பிரபல முக்கியமாகவுள்ள கருத்திட்டமொன்றாக மொறகஹகந்த, களுகங்கைக் கருத்திட்டங்கள் இனங்காணப்பட்டுள்ளதோடு, ஏற்கனவே அவற்றின் வேலைகளில் கணிசமான அளவு பூர்த்தியடைந்துள்ளது. மொறகஹகந்த கருத்திட்டத்தின் பிரதான நிருமாணிப்பு வேலைகளின் 60 சத வீதம் முடிவடைந்துள்ளதோடு, 2017 மார்ச் மாதமளவில் இந்த நிருமாணிப்பு வேலைகளை பூர்த்தி செய்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கமைவாக, இந்தக் கருத்திட்டதின் பிரதான வேலைகளின் வடிவமைப்பை மதிப்பிட்டு அங்கீகரித்தல், நிருமாணிப்பு வேலைகளை மேற்பார்வை செய்வதற்கான மதியுரைச் சேவை ஒப்பந்தம் என்பவற்றை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் மகாவலி மதியுரை பணியகத்திற்கு கையளிக்கும் பொருட்டு மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.