• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-03-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சுனாமி வீடமைப்புத் திட்டமொன்றாக கல்முனை நகரத்தில் அபிவிருத்தி செய்யப்பட்ட காணித் துண்டொன்றை தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபைக்கு குறித்தொதுக்குதல்
- 2014 ஆம் ஆண்டில் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தினால் பாரிய அளவில் பாதிக்கப்பட்ட நகரங்களுள் ஒன்றாக கல்முனை நகரத்தை குறிப்பிடலாம். இங்கு வீடுகளை இழந்த குடும்பங்களை மீளக் குடியமர்த்துவதற்காக நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் கொள்வனவு செய்யப்பட்ட காணி ஒன்றில் தனிப்பட்ட பண நன்கொடை மூலம் 174 வீட்டு அலகுகளைக் கொண்ட மூன்று (03) மாடி வீடமைப்புத் தொகுதியொன்று நிருமாணிக்கப்பட்டு இடம்பெயர்ந்த குடும்பங்கள் குடியமர்த்தப்பட்டுள்ளனர். இந்த வீடமைப்புத் தொகுதியை பராமரிப்பதற்கு முறையான வழிமுறையொன்று இல்லாததன் காரணமாக குடியிருப்பாளர்கள் முகம்கொடுக்க நேர்ந்துள்ள பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு மாற்று வழிகளை ஏற்பாடு செய்து இந்த வீடமைப்புத் தொகுதியின் பொது வசதிகளை முகாமிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபைக்கு இயலுமாகும் வகையிலும் இந்த வீடுகளில் குடியிருப்பவர்களுக்கு உறுதிகளை வழங்குவதன் மூலம் இந்த வீடுகளை அவர்களுக்கு சட்டபூர்வமாக உடைமையாக்கக்கூடிய விதத்தில் உரிய காணியை நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபைக்கு இறையிலக் கொடையொன்றாகக் கையளிக்கும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.