• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-03-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
லங்கா சதொசவை மறுசீரமைத்தல்
- லங்கா சதொச நிறுவனம் 14,078 மில்லியன் வங்கிக் கடனொன்றின் மூலம் 2014 ஆகஸ்ட் மாதம் 257,853 மெற்றிக்தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டதோடு, எதிர்பார்க்கப்பட்டவாறு விற்பனை செய்வதற்கு இயலாமற் போனமையினால் பெற்றுக் கொள்ளப்பட்ட கடன் தொகையை செலுத்துவதற்கு முடியாத நிலைக்கு ஆளாகியுள்ளது. இதுவரை குறித்த தொகையிலிருந்து சுமார் 5,742 மில்லியன் ரூபா செலுத்தப்பட்டுள்ளதோடு, நிலுவை வட்டியுடன் சேர்த்து மேலும் 8,754 மில்லியன் ரூபா செலுத்தப்படவுள்ளது. இந்த அரிசித் தொகையை இறக்குமதி செய்வதற்காக துறைமுக கட்டணம், தாமதக்கட்டணம் போக்குவரத்து மற்றும் களஞ்சியப்படுத்தல் செலவுகள் ஆகியவற்றுடன் சுமார் 17,000 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது தற்போது எஞ்சியுள்ள அரிசித் தொகையிலிருந்து 3,048 மெற்றிக்தொன் அரிசி மனித பாவனைக்கு பொருத்தமற்றதென கண்டறியப்பட்டுள்ளது. மீதி அரிசித் தொகையை விற்பனை செய்வதன் மூலம் எதிர்பார்க்கப்படும் வருமானம், செலுத்தப்படவேண்டிய நிலுவைக்கடன் தொகையைச் செலுத்துதல் மற்றும் லங்கா சதொச நிறுவனத்தின் அன்றாட தொழிற்பாட்டு பணிகளை நடாத்திச் செல்தல் போன்றவற்றுத் தேவையான தொழிற்பாட்டு மூலதனத்தைப் பெற்றுக் கொள்வதற்கு வருமானம் இது போதுமானதல்லவெனத் தெரிகின்றது.

இதற்கமைவாக, இந்த நிலைமையை தவிர்ப்பதற்காக அரசாங்க வங்கிக்கு லங்கா சதொச நிறுவனத்தினால் செலுத்தப்படவுள்ள நிலுவைக் கடன் தொகையை செலுத்துவதற்கு அவசர தொழிற்படு மூலதன தேவைக்காகவும் நிதியங்களை திறைசேரியினால் ஏற்பாடு செய்யும் பொருட்டு நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களினாலும் கைத்தொழில், வாணிப அலுவல்கள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்களினாலும் கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சர் பி.ஹரிஷன் அவர்களினாலும் திறமுறை அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம அவர்களினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டுப் பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.