• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-03-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மண்சரிவு ஏற்படக் கூடுமென்னும் உயர் ஆபத்து நிலவும் பிரதேசங்களில் வசிக்கும் குடும்பங்களை மீளக் குடியமர்த்துவது சம்பந்தமாக சிபாரிசுகளை சமர்ப்பிக்கும் பொருட்டு நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழுவின் அறிக்கை
- மண்சரிவு ஏற்படக் கூடுமென்னும் உயர் ஆபத்து நிலவும் பிரதேசங்களில் வசிக்கும் குடும்பங்களை மீளக் குடியமர்த்துதல் மற்றும் மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகள் நிருமாணித்தலை துரிதப்படுத்துதல் சம்பந்தமாக ஆராய்ந்து அறிக்கையிடுவதற்காக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா அவர்களின் தலைமையில் அமைச்சரவை உபகுழுவொன்று அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டது. இதற்கமைவாக, மண்சரிவு ஆபத்துடன் கூடிய இடங்களில் வசிக்கும் குடும்பங்களின் எண்ணி்கையை அறிந்து கொள்தல், அவர்களை வேறு இடங்களில் குடியமர்த்துதல் அனர்த்தங்களுக்கு ஆளானவர்களை மீள பழைய நிலைக்கு கொண்டுவருவதற்கான வசதிகளை ஏற்பாடு செய்தல், கடும் ஆபத்து நிறைந்த இடங்களிலுள்ள பாடசாலைகள் போன்றவற்றை வேறு இடங்களுக்கு கொண்டு செல்தல் போன்ற விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தி சமர்ப்பிக்கப்பட்டிருந்த சிபாரிசுகளை முன்னுரிமை அடிப்படையில் கட்டம் கட்டமாக நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.