• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-03-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வனசீவராசிகள் முகாமைத்துவ அலகுகளை உருவாக்குதல்
- மனித மோதல் காரணமாக 50இற்கும் மேற்பட்ட மனித உயிர்களும் 200 இற்கு மேற்பட்ட காட்டு யானைகளும் வருடாந்தம் இலங்கைக்கு இல்லாமற் போவதோடு, யானைகளுக்கு மேலதிகமாக சிறுத்தை, முதலை, குரங்குகள் போன்ற பிற பிராணிகளும் மனிதர்களுடன் மோதல்களை உருவாக்கும் வாய்ப்பு அதிகரித்து வருகின்றது. இந்த நிலைமையை கட்டுப்படுத்துவதில் வனசீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தினால் திட்டம் தீட்டப்பட்டு வருவதோடு, வனசீவராசிகள் மற்றும் மனிதர்களுக்கிடையிலான மோதல் பற்றி ஏதேனும் நிகழ்வொன்று அறிக்கையிடப்பட்டவுடன் குறித்த இடத்திற்குச் சென்று தேவையான நடவடிக்கைகளை துரிதமாக எடுப்பதற்கு இத்தகைய பிரச்சினைகள் பரவலாக அறிக்கையிடப்படும் வனசீவராசிகள் பிரிவுகளை தழுவும் விதத்தில் வனசீவராசிகள் நிர்வாக அலகுகளை தாபிக்கும் பொருட்டு வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனசீவராசிகள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.