• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-03-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சர்வதேச ஒப்பந்தங்கள் சம்பந்தமாக மின்னணு தொடர்பாடல்களை பாவனைக்குரிய ஐக்கிய நாடுகள் சமவாயத்திற்கு செயல்வலுவாக்கமளித்தல் - 2006 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க மின்னணு கொடுக்கல் வாங்கல் சட்டத்தைத் திருத்துதல்
- ஐக்கிய நாடுகள் மின்னணு தொடர்பாடல் நியதிச்சட்டத்திற்கு இலங்கை 2015 யூலை மாதம் 07 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டதோடு, இந்த நியதிச்சட்டத்திற்கு செயல்வலுவாக்கம் அளித்த ஆசியாவின் இரண்டாவது நாடும் தெற்காசியாவின் முதலாவது நாடும் இலங்கையாகும். சருவதேச ஒப்பந்தங்கள் தொடர்பில் மின்னணு முறையில் தொடர்பாடல்களை பேணும் போது எழும் பிரச்சினைகளுக்கு நடைமுறை தீர்வுகளை வழங்குவது இந்த நியதிச்சட்டத்தின் நோக்கமாகும். இலங்கை மின்னணு வர்த்தக பணிகளுக்கு பொருத்தமான முதலீட்டு நிலையமொன்றாக மேம்படுத்துவதற்குத் தேவையான வசதிகளை செய்யும் இந்த நியதிச்சட்டமானது இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படுவதற்காக 2006 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க மின்னணு கொடுக்கல் வாங்கல் சட்டத்தை திருத்தும் பொருட்டு தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.