• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-03-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கிராமிய பொருளாதார அபிவிருத்தியின் பொருட்டு நடைமுறைப்படுத்தும் கருத்திட்டங்களுக்காகக் கிடைக்கப்பெறும் நிதி ஏற்பாடுகளிலிருந்து 25 சதவீதத்தை பெண்களுக்காக ஒதுக்குதல்
- கிராமிய பொருளாதார அபிவிருத்தியின் பொருட்டு நடைமுறைப்படுத்தப்படும் கருத்திட்டங்களின் மூலம் கிடைக்கப்பெறும் நிதி ஏற்பாடுகளிலிருந்து 25 சதவீதத்தை பெண்களுக்காக ஒதுக்கும் பொருட்டு இதற்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்பு சம்பந்தமாக ஆராயும் பொருட்டு நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழுவின் சிபாரிசின் பிரகாரம் பல்வேறுபட்ட அமைச்சுக்களினால் நடைமுறைப்படுத்தப்படும் இனங்காணப்பட்ட கிராமிய அபிவிருத்தி கருத்திட்டங்களுக்காக செய்யப்படும் முதலீடுகளிலிருந்து ஆகக்குறைந்தது 25 சதவீதமாவது பெண்களை குறியிலக்காகக் கொண்டு மேற்கொள்வதற்காக மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் (திருமதி) சந்திராணி பண்டார அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.