• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-03-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஆபாச வௌியீட்டு சட்டமூலம்
- ஆபாச வெளியீடுகளினால் உருவாகக்க கூடிய பிரதிகூலமான பாதிப்புகளிலிருந்து பிள்ளைகளை பாதுகாப்பது மிக முக்கியமானதாகும். இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்கும் பொருட்டு தண்டனைச் சட்டக் கோவையிலும் 1927 ஆம் ஆண்டின் ஆபாச வெ ளியீடுகள் கட்டளைச் சட்டத்திலும் உள்ள ஏற்பாடுகள் தற்போதைய சமூகத்திற்கு போதுமானதாகவில்லை. இதற்கமைவாக சிறுவர்களைப் பயன்படுத்தி செய்யப்படும் ஆபாச வெளியீடுகளை தடைசெய்தல், சிறுவர்களை பயன்படுத்தி ஆபாச வெளியீடுகள் கணனி முறைமைகளை பொறுப்பில் வைத்திருத்தல், கணனி ஊடாக பிள்ளைகளின் ஆபாச செயற்பாடுகள் பற்றிய காட்சிகள் தடுத்தல் போன்றவற்றுக்கான ஏற்பாடுகளைச் செய்யும் பொருட்டு நடைமுறையிலுள்ள சட்டங்களுக்குப் பதிலாக ஆபாச வெளியீடுகள் சட்டமொன்றை கொண்டுவரும் பொருட்டு நீதி அமைச்சர் (கலாநிதி) விஜேதாச ராஜபக்‌ஷ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.