• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-03-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அநுராதபுரம் கூட்டு நகர அபிவிருத்திக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்து வதற்காக நிதியுதவி பெற்றுக் கொள்ளல்
- இலங்கையில் கலாசார முக்கோணத்திற்குரிய அநுராதபுரம் அதன் பழைமைவாய்ந்த தன்மையினாலும் அதேபோன்று பௌத்த மக்களின் வழிபாட்டுக்குரிய புனித தலங்கள் பல உள்ளதன் காரணத்தினாலும் முக்கிய நகரமொன்றாகும். அதேபோன்று அது வடமத்திய மாகாணத்தின் பொருளாதார நிருவாக மைய நிலையமொன்றாவதோடு, உள்நாட்டு வௌிநாட்டு உல்லாசப் பயணிகளைக் கவர்ந்த இடமொன்றும் ஆகும். தற்போது 51,000 க்கும் மேற்பட்ட மக்கள் அநுராதபுர நகர எல்லைக்குள் வசிப்பதோடு, எதிர்காலத்தில் இது அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சின் கீழ் நடைமுறையிலுள்ள திறமுறை நகர அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் கலாசார மற்றும் இயற்கை மரபுரிமைகளைப் பேணிப் பாதுகாத்து அநுராதபுரம் நகரத்தில் புண்ணியபூமி மற்றும் புதிய நகர பிரதேசங்களுக்கிடையில் சமச்சீரான அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்குப் பிரேரிக்கப்பட்டுள்ளது. நகர வடிகாலமைப்பு முறையை விருத்தி செய்தல், பொது போக்குவரத்து சேவை வசதிகள் மற்றும் நகர வாகன முகாமைத்துவம் பொது இடவசதிகளை விரிவாக்கம் செய்து இந்தக் கருத்திட்டத்தின் மூலம் செய்யப்படவுள்ளன. இதற்கமைவாக தற்போது நடைமுறையிலுள்ள திறமுறை நகர அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் அநுராதபுரம் இணைந்த நகர அபிவிருத்திக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் மாண்புமிகு பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கும் இந்தக் கருத்திட்டத்திற்காக 52 மில்லியன் யூரோக்களைக் கொண்ட கடன் வசதிகளை ஏற்பாடு செய்துகொள்ளும் பொருட்டு பிரான்ஸ் அபிவிருத்தி நிறுவனத்துடன் கடன் உடன்படிக்கையொன்றை செய்து கொள்ளும் பொருட்டு நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கும் அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.