• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-03-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
"பொதுநலவாய நாடுகளின் சிறிய நாடுகளுக்கான வர்த்தக நிதி வசதிகள்" சார்பில் முதலீடு செய்தல் (Commonwealth Small States Trade Financing Facillety)
- 2015 நவெம்பர் மாதம் மோல்ட்டா குடியரசில் நடாத்தப்பட்ட பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் கூட்டத்தில் (CHOGM) வர்த்தக மற்றும் முதலீட்டு மேம்பாட்டுக்காக விசேடமாக பொதுநலவாய நாடுகளின் சிறிய மற்றும் அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளுக்காக "பொதுநலவாய நாடுகளின் சிறிய நாடுகளுக்கான வர்த்தக நிதி வசதிகள்" என்னும் பெயரில் புதிய நிதியமொன்றை ஆரம்பிப்பதற்கு இலங்கை, இந்தியா, மொறீஸியஸ் மற்றும் மோல்ட்டா ஆகிய நாடுகள் பொதுநலவாய நாடுகளுடன் சேர்ந்து பிரகடனப்படுத்தின. பொதுநலவாய நாடுகளுக்குரிய சிறிய நாடுகளுக்கும் அந்த நாடுகளிலும் மேற்கொள்ளப்படும் வர்த்தகங்களை மேம்படுத்துவது இந்த நிதியத்தின் குறிக்கோளாகும். இதற்கமைவாக இந்த நிதியத்தின் “ஆதார முதலீட்டாளர்” ஒருவராக 1.5 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களை முதலீடு செய்யும் பொருட்டு நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.