• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-03-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தேசிய அதிவேக நெடுஞ்சாலை அதிகாரசபை சட்டமூலம்
- இலங்கையில் அதிவேக நெடுஞ்சாலைகளை நிருமாணித்தல், முகாமித்தல், அபிவிருத்தி செய்தல், பராமரித்தல் போன்றவற்றிற்காக தேசிய அதிவேக நெடுஞ்சாலை அதிகாரசபையொன்றைத் தாபிப்பதற்கும் அதிவேக நெடுஞ்சாலைகளில் பாதுகாப்பாகவும் வினைத்திறனுடனும் சுற்றாடல் நட்புறவுடனும் வாகனப் போக்குவரத்து நடைபெறுகின்றமையை உறுதிப்படுத்து வதற்கும் அதற்குரிய அதிகாரங்களையும் பணிகளையும் கையளிப்பதற்கும் ஏற்பாடுகளைச் செய்யும் பொருட்டு வரையப்பட்டுள்ள தேசிய அதிவேக நெடுஞ்சாலை அதிகாரசபை சட்டமூலத்தை வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர் அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குமாக உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.