• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-03-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பொது போக்குவரத்து சேவை சார்பில் முற்கொடுப்பனவு அட்டை முறையை நடைமுறைப் படுத்துதல்
- பொது போக்குவரத்து சேவையின் தர அபிவிருத்திக்கு தகவல் தொழினுட்ப முறைகளின் பாவனை இன்று பெரும்பாலான நாடுகளில் பிரபல்யமடைந்து காணப்படுகின்றது. இலக்ரோனிக் கட்டணம் அறவிடும்முறை இவற்றுள் மிக பிரபல்யமாகவுள்ளதோடு, பிரயாணிகளிடம் கட்டணங்களை அறவிடும் போது இதன் மூலம் மிகச்சரியாக குறித்த தொகையை அறவிடக்கூடியமை, சரியான வருமானம் வசு உரிமையாளர்களுக்குக் கிடைக்கின்றமை, சில்லறைக் காசுகள் கொண்டுசெல்லும் சிக்கலான நிலையை தவிர்த்துக் கொள்வதற்கு இயலுமாகின்றமை இந்த முறையின் மூலம் கிடைக்கும் நன்மைகள் சிலவாகும். இலங்கை தகவல், தொலைத்தொடர்பாடல் தொழினுட்ப முகவராண்மை, இலங்கை போக்குவரத்து சபை, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, தனியார் வசுவண்டி உரிமையாளர்கள், அரச வங்கிகள் மற்றும் தகவல் தொழினுட்பக் கம்பனிகள் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் முற்கொடுப்பனவு அட்டைகள் ஊடாக இலக்ரோனிக் கட்டண அறிவிடும் முறையொன்றை பயணிகள் போக்குவரத்து வசுவண்டிகளுக்காக அறிமுகப்படுத்தும் பொருட்டு போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.