• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-03-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சூழல் தொகுதி பாதுகாப்பு மற்றும் முகாமைத்துவக் கருத்திட்டம்
- இலங்கை பூகோள உயிரினப் பல்வகைமை பிரதேசமொன்றாகத் தரப்படுத்தப்பட்டிருந்தபோதிலும் இந்த நாட்டின் சூழல் தொகுதியும் உயிரின பல்வகைமையும் கடும் பாதிப்புகளுக்கு முகம்கொடுத்துள்ளது. சூழல் பாதுகாப்பினைப் பலப்படுத்தி பேணுகையையும் முகாமைத்துவத்தையும் உறுதிப்படுத்தும் நிலைபேறுடைய அபிவிருத்தியை நோக்கி இலங்கையைக் கொண்டு செல்வது அரசாங்கத்தின் முக்கிய நோக்கமாகும். மனித - யானைகள் மோதலற்ற நிலைமை மற்றும் இயற்கை வளங்களை நிலைபேறாக பயன்படுத்துதல், பாதுகாத்தல் தொடர்பில் முன்மாதிரியாக இருந்து தெரிவுசெய்யப்பட்ட பிரதேசங்களில் கூர் உணர்வுடைய சுற்றாடல் தொகுதிகளை மேம்படுத்துவதற்காக அரசாங்க நிறுவனங்களுக்கும் பொது மக்களுக்கும் உள்ள ஆற்றலைப் பலப்படுத்துவது இந்தக் கருத்திட்டத்தின் நோக்கமாகும். உலக வங்கியிடமிருந்து பெற்றுக்கொள்ளப்படும் 40 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட கடன் தொகையொன்றையும் இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்படும் 473 மில்லியன் ரூபாவையும் பயன்படுத்தி இந்தக் கருத்திட்டத்தை 2016 ஆம் ஆண்டிலிருந்து 2021 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியினுள் நடைமுறைப்படுத்தும் பொருட்டு மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.