• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-03-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தொழிற்பாட்டு குத்தகை திட்டத்தின் கீழ் அரசாங்க நிறுவனங்களுக்கு வாகனங்களைப் பெற்றுக் கொள்ளல்
- அரசாங்க நிறுவனங்களுக்கு வாகனங்களை கொள்வனவு செய்வதற்கும் அதேபோன்று வாகனங்களின் அதிகரித்த திருத்த வேலைகளுக்கான செலவுகள் மற்றும் நிருவாக ரீதியிலான தாமதங்களினால் ஏற்படும் செலவுகள் என்பன காரணமாக வாகனங்களின் பராமரிப்புக்கு அரசாங்கத்தினால் கணிசமான அளவு தொகை செலவு செய்யப்படுகின்றது. தற்போதுள்ள முறையில் காணப்படும் குறைபாடுகளை சீர்செய்வதற்கும் தற்போது சகல அரசாங்க நிறுவனங்களும் பெருமளவு வாகனங்களின் பராமரிப்புக்காக வகிக்கும் செலவுகளை குறைப்பதற்கும் அதேபோன்று குத்தகை தொழிலை மேம்படுத்தி அதன் வினைத்திறனை அதிகரிப்பதற்காகவும் அரசாங்க நிறுவனங்களிலும் அரசாங்கத்திற்குச் சொந்தமான தொழில்முயற்சிகளிலும் உத்தியோகபூர்வ வாகனங்களுக்கான தகைமையுள்ள உத்தியோகத்தர்களுக்கும் சேர்மங்களுக்கும் வாகனங்களை பெற்றுக் கொள்வதற்கு "தொழிற்பாட்டு குத்தகை திட்டத்தை" அறிமுகப்படுத்துவதற்கு 2016 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டத்தின் மூலம் பிரேரிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் கொள்வனவு செயற்பாட்டின் மூலம் தெரிவு செய்யப்படும் வாகன வாடகை சேவைகளை வழங்கும் தகைமை பெற்ற வழங்குநர்களிடமிருந்து 60 மாத காலத்தி்ற்கு நிலையான வாடகை அடிப்படையின் கீழ் உபயோகப்படுத்தி மீள கையளித்தல் என்னும் அடிப்படையில் அரசாங்கத்திற்குத் தேவையான வாகனங்களின் ஒருபகுதி பெற்றுக் கொள்ளப்படுவதோடு வாகனத்தின் காப்புறுதி, உரிமப்பத்திரக் கட்டணம், திருத்த வேலைகளுக்கான கட்டணங்கள் உட்பட, பிற உரிய கட்டணங்கள் வாகனத்தினை குத்தகைக்கு விடும் ஆளினால் ஏற்றுக் கொள்ளப்படுவதோடு, சாரதி மற்றும் எரிபொருள் போன்றவற்றுக்கான செலவுகளை மாத்திரம் அரசாங்கம் ஏற்கின்றது. அரசாங்கத்திற்கு உச்ச செலவு மீதி உருவாகும் விதத்தில் உத்தேச தொழிற்பாட்டுக் குத்தகை திட்டத்தின் கீழ் வாகனங்களைப் பெற்றுக் கொள்ளும் முறையை நடைமுறைப்படுத்தும் பொருட்டு நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.