• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-03-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2015/2016 பெரும்போகத்தில் நெல்கொள்வனவு நிகழ்ச்சித்திட்டம்
- 2015/2016 பெரும்போகத்துக்கான நெல் அறுவடை தற்போது ஆரம்பிக்கப் பட்டுள்ளதோடு, நெல்கொள்வனவு செய்யும் அரசாங்கத்தின் கொள்கையின் பிரகாரம் இந்தப் போகத்தில் 19 மாவட்டங்களிலும் நெல் கொள்வனவு செய்வதற்கு நெல் சந்தைப்படுத்தும் சபையினால் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கமைவாக, 2015/2016 பெரும்போகத்தில் அரசாங்கத்தின் நெல் கொள்வனவு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் நெல் சந்தைப்படுத்தும் சபையினால் விவசாயிகளிடமிருந்து நேரடியாக நெல் கொள்வனவு செய்வதற்கும் இந்த நிகழ்ச்சித்திட்டத்திற்கு உரிய மாவட்டங்களின் மாவட்ட செயலாளர்களின் / அரசாங்க அதிபர்களின் ஒத்தாசையுடன் நடைமுறைப்படுத்துவதற்கும் கொள்வனவு செய்யப்படும் "கீரி சம்பா" கிலோ ஒன்று 50/- ரூபா வீதமும் "சம்பா" வகை நெல் கிலோ ஒன்று 41/- ரூபா வீதமும் "நாடு" வகை நெல் கிலோ ஒன்று 38/- ரூபா வீதமும் செலுத்துவதற்கும் ஒருவரிடமிருந்து 2,000 கிலோ நெல் என்னும் வரையறைக்கு உட்பட்டு இந்தப் போகத்தில் நெற்செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்வதற்குமாக கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சர் பி.ஹரிஷன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.