• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-03-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சுற்றுலாத்துறையின் ஒத்துழைப்பு தொடர்பில் இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ள புரிந்துணர்வு உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவதற்காக கூட்டு செயற்பாட்டு வேலைத்திட்டம்
- சுற்றுலாத்துறை ஒத்துழைப்பு தொடர்பிலான புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு இலங்கையும் தாய்லாந்தும் 2013 ஆம் ஆண்டில் கைச்சாத்திடப்பட்டுள்ளன. அண்மையில் இடம்பெறவுள்ள தாய்லாந்தின் மாண்புமிகு பிரதி பிரதம அமைச்சரின் இலங்கை விஜயத்தின் போது மேற்போந்த உடன்படிக்கையை செயற்படுத்துவதற்கான கூட்டு செயற்பாட்டு வேலைத்திட்டமொன்றுக்கு இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறித்தவ சமய அலுவல்கள் அமைச்சுக்கும் தாய்லாந்து இராச்சியத்தின் சுற்றுலா மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சுக்கும் இடையில் கைச்சாத்திடும் பொருட்டு சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறித்தவ சமய அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.