• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-03-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
காலி, கம்பஹா, கண்டி, குருநாகல் மற்றும் சம்பாந்துறை உயர்தொழினுட்ப நிறுவனங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல்
- உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் கீழ் இயங்கும் இலங்கை உயர் தொழினுட்ப கல்வி நிறுவனத்திற்கு கையளிக்கப்பட்டுள்ள பணிகளை வெற்றிகொள்ளும் பொருட்டு சகல மாவட்டங்களிலும் உயர் தொழினுட்ப கல்வி நிறுவனம் ஒன்று வீதம் தாபிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது இலங்கை உயர் தொழினுட்ப கல்வி நிறுவனத்தின் கீழ் 11 உயர் தொழினுட்ப நிறுவனங்களும் 6 தொழினுட்ப நிறுவனங்களும் இயங்குவதோடு, இவற்றின் மூலம் வழங்கப்படும் உயர் தேசிய டிப்ளோமா சார்பில் மிக உயர் அங்கீகாரம் நிலவுகின்றது. நிலவும் இடவசதிகள் காணாமையினால் அங்கு பாட நெறிகளுக்காக 2015 ஆம் ஆண்டில் விண்ணப்பித்த 20,000 இற்கும் மேற்பட்ட மாணவர்களிடமிருந்து ஆட்சேர்ப்புச் செய்வதற்கு முடியுமானது 35 சதவீதமானவர்களை மாத்திரமாகும். இதன்காரணமாக தற்போதைய தொழிற்சந்தையில் நிலவும் முன்னுரிமை அங்கீகாரத்துடனான பொறியியலாளர் கணிய அளவையாளர், ஆங்கில மொழி மற்றும் தகவல் தொழினுட்பம் போன்ற விடயத்துறைகளில் உயர் தொழினுட்ப கல்வியினைப் பெறுவதற்கு மாணவர்களுக்குள்ள வாய்ப்பு வரையறுக்கப்பட்டுள்ளது. இதற்குத் தீர்வொன்றாக கேகாலை, தெஹிவளை, யாழ்ப்பாணம், காலி, கம்பஹா, கண்டி, குருநாகல், சம்பாந்துறையிலுள்ள உயர் தொழினுட்ப நிறுவனங்களின் கட்டடங்கள், உபகரணங்கள், பதவியணி மற்றும் மாணவர் உள்வாங்கும் அளவினை அதிகரித்தல் போன்றவற்றுக்கான கருத்திட்டங்களை 2,368.5 மில்லியன் ரூபாவைக் கொண்ட மதிப்பீட்டு செலவில் நடைமுறைப்படுத்தும் பொருட்டு உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.