• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-03-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
விமானப் பயணிகள் தகவல்களை முன்னதாக செயல்முறைப்படுத்தல் மற்றும் பயணிகள் பெயர் பதிவுக் குறிப்புகளை பெற்றுக் கொள்ளும் முறைமையொன்றைத் தாபித்தல்
- இலங்கை தகவல் மற்றும் தொலைத்தொடர்பாடல் தொழினுட்ப முகவராண்மையையும்(ICTA) Socie'te Internationale de Te'le Communications Ae'ronautiques (SITA) நிறுவனத்தையும் தரப்பொன்றாக இணைத்துக் கொண்டு விமானப் பயணிகள் தகவல்களை முன்னதாக செயல்முறைப்படுத்தல் மற்றும் பயணிகள் பெயர் பதிவுக் குறிப்புகளை பெற்றுக் கொள்ளும் முறைமையொன்றை குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தில் தாபிக்கும் பொருட்டு தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.