• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-03-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கொழும்பு - 03, பெரஹர மாவத்தையிலுள்ள காணியை கொழும்பு திட்ட செயலகத்திற்கு குறித்தொதுக்குதல்
- தற்போது வாடகை அடிப்படையில் பெறப்பட்ட கட்டடமொன்றில் நடாத்திச் செல்லப்படும் இலங்கையில் தாபிக்கப்பட்டுள்ள சர்வதேச பணியகமொன்றான கொழும்பு திட்ட செயலகத்திற்கு போதுமான அலுவலக இடவசதிகளுடனான இடமொன்றில் தாபிப்பதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக, இந்த செயலகத்தை தாபிப்பதற்கு பொருத்தமானதென இனங் காணப்பட்டுள்ள கொழும்பு - 03, பெரஹர மாவத்தையிலுள்ள காணித்துண்டொன்றை 50 வருடகால குத்தகை அடிப்படையில் கொழும்பு திட்ட செயலகத்திற்கு வழங்கும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.