• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-03-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
உலக வங்கியினால் நிதியுதவி அளிக்கப்படவுள்ள போக்குவரத்து இணைப்பு மற்றும் சொத்துக்கள் முகாமைத்துவ கருத்திட்டம்
- உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் பிற சர்வதேச கொடை நிறுவனங்கள் ஆகியன பெரும்பாலான நாடுகளில் வீதிகளைப் புனரமைப்பதற்கும் பராமரிப்பதற்குமாக ஏற்கனவே நடைமுறையிலுள்ள வௌியீடு மற்றும் செயற்திறனை அடிப்படையாகக் கொண்ட ஒப்பந்த முறையின் கீழ் பேலியகொடை - புத்தளம் வீதியை புனரமைத்தலை முன்னோடிக் கருத்திட்டமொன்றாக நடைமுறைப்படுத்துவதற்கும் இந்த கருத்திட்டத்திற்குத் தேவையான நிதியங்களைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டும் உலக வங்கியுடன் கலந்துரையாடுவதற்காக உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.