• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-03-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை சுற்றுலா தொழிலின் பொன் விழாவைக் கொண்டாடுதல்
- 1966 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க சுற்றுலாத்துறை சபைச் சட்டமானது சட்டமாக்கப்பட்டதன் பின்னர், 1966 ஆம் ஆண்டில் இலங்கை சுற்றுலாச் சபை தாபிக்கப்பட்டவுடன் இலங்கையில் சுற்றுலா தொழில் குறியிலக்குடன் செயற்பட ஆரம்பித்தது. அதுமுதல் கடந்த 50 வருட காலப்பகுதிக்குள் மிகக் கூடுதலான வருமானத்தை ஈட்டிக்கொள்வதற்கு சுற்றுலாத்துறை வெற்றி கண்டுள்ளதோடு, அதன் மூலம் பிறப்பிக்கப்பட்டுள்ள நேரடி மற்றும் மறைமுக தொழில்வாய்ப்புகள் மூன்று இலட்சத்திற்கு கிட்டியதாகும். 1966 ஆம் ஆண்டிலே 19,079 சுற்றுலாப் பயணிகள் இந்நாட்டிற்கு வந்ததோடு இது 2015 ஆம் ஆண்டளவில் 1,798,380 ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில் மாண்புமிகு பிரதம அமைச்சரினால் பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பித்த அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கை பிரகடனத்தின் மூலமும் அதேபோன்று 2016 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்ட பிரேரிப்புகள் மூலமும் இலங்கையின் சுற்றுலா தொழிலை அபிவிருத்தி செய்யும் மேம்படுத்தும் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்கமைவாக, சுற்றுலா தொழிலின் எதிர்வரும் அதன் போக்கிற்கு பங்களிப்பு நல்கும் விதத்தில் இலங்கையின் சுற்றுலாத் தொழிலின் பொன்விழாவைக் கொண்டாடும் பொருட்டு நினைவு நிகழ்ச்சித்திட்டமொன்றை இந்த ஆண்டில் சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறித்தவ சமய அலுவல்கள் அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படவுள்ளமை சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறித்தவ சமய அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்கள் அமைச்சரவையினால் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.