• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-03-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பொருளாதார முகாமைத்துவம் பற்றிய அமைச்சர்கள் குழுவின் பணிகளை விரிவுபடுத்துதல்
- பொருளாதார அலுவல்கள், நிதி மற்றும் நிதிக் கொள்கை, தேசிய முதலீட்டு நிகழ்ச்சித்திட்டம். தனியார்துறை முதலீடுகளை இலகுபடுத்தல், முதலீடு மற்றும் நாட்டின் பொருளாதார அபிவிருத்தி சம்பந்தமாக நேரடியாக ஏற்புடையதாகும் பல்வேறுபட்ட சட்ட முறைமைகளை நடைமுறைப்படுத்துதல் போன்ற விடயங்கள் சம்பந்தமாக அமைச்சரவைக்கு சிபாரிசுகளைச் சமர்ப்பிக்கும் பொருட்டு மாண்புமிகு பிரதம அமைச்சர் தலைமைதாங்கும் பொருளாதார முகாமைத்துவம் பற்றிய அமைச்சர்கள் குழு தாபிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவினால் அமைச்சரவைக்குச் செய்யப்படும் சிபாரிசுகளின் நடைமுறைப்படுத்தலை வினைத்திறனுடன் மேற்கொள்வதற்குப் பொருத்தமான வழிமுறையொன்றை அறிமுகப்படுத்தும் பொருட்டு பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.