• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-02-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அரச சேவையில் சம்பளங்களின் திருத்தம் - 2016
- அரசாங்க சேவையாளர்களுக்கு தற்போது உரித்துடைய அடிப்படை சம்பளத்திற்கு மேலதிகமாக வழங்கப்பட்டுள்ள விசேட படிகளையும் அதிமேதகைய சனாதிபதி அவர்களின் தேர்தல் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டிருந்தவாறு வழங்கப்பட்ட 10,000/- ரூபாவைக் கொண்ட மாதாந்த இடைக்காலப் படியும் கட்டம் கட்டமாக சேர்க்கப்பட்டு அரசாங்க சேவையின் சம்பளத்தை திருத்துவதற்கு 2016 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டத்தின் மூலம் முன்மொழியப்பட்டது. அதற்கமைவாக, தேசிய சம்பளங்கள் ஆணைக்குழுவின் சிபாரிசின் பிரகாரமும் நிதி அமைச்சின் உடன்பாட்டுடனும் தயாரிக்கப்பட்டுள்ள புதிய சம்பள கட்டமைப்பானது 2016‑01‑01 ஆம் திகதியிலிருந்து அமுலுக்கு வரும் விதத்தில் நடைமுறைப்படுத்துவதற்கும் இதற்கமைவாக உரிய சுற்றறிக்கை அறிவுறுத்தல்களை வழங்குவதற்குமாக பொது நிருவாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.