• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-02-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தேசிய சம்பளங்கள், பதவியணிகள் ஆணைக்குழுவைத் தாபித்தல்
- 2015 சனாதிபதி தேர்தலில் தன்னால் முன்வைக்கப்பட்டிருந்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் அரசாங்க சேவையின் வினைத்திறனையும் விளைவு பெருக்கத்தையும் மேம்படுத்துவதற்கும் அரசாங்க ஊழியர்களின் வாழ்க்கைத் தரத்தையும் சேவையில் அவர்களுடைய திருப்திகரமான நிலைமையையும் மேம்படுத்துவதற்கும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுமென தன்னால் வழங்கப்பட்ட உறுதிமொழிக்கு அமைவாக அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள எதிர்வரும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, தற்போது நடைமுறையிலுள்ள சம்பள கட்டமைப்பையும் பதவியணியையும் விரிவாகவும் விதிமுறையாகவும் மீளாய்வு செய்து மிகப்பயனுள்ளதும் திருப்திகரமானதுமான அரசாங்க சேவையொன்றை உருவாக்குவதற்காகவும் அதேபோன்று தனியார்துறையின் ஆள்வலு தேவைபற்றி கவனம் செலுத்தி தேசிய சம்பளக் கொள்கையொன்றை வகுத்தமைப்பதற்கு அரச மற்றும் தனியார் துறைகளின் சகலரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் விதத்தில் தேர்ச்சி மிக்க அனுபவம் வாய்ந்த உத்தியோகத்தர்களை கொண்ட புதிய சம்பளங்கள், பதவியணிகள் ஆணைக்குழுவொன்றை நியமிக்கும் பொருட்டு அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.