• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-02-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பாரிய கொழும்பு அணுப்பீட்டு மற்றும் விநியோக சேதங்களை குறைக்கும் கருத்திட்டம் - பொதி இலக்கம் 01: நெய்யரி துணைநிலையங்களை நிருமாணித்தல் மற்றும் பொதி இலக்கம் 2: அணுப்பீட்டு மற்றும் விநியோக முறைமைகளை நிருமாணித்தல்
- பாரிய கொழும்பு அணுப்பீட்டு மற்றும் விநியோக வலையமைப்பை விருத்தி செய்து அதன் மூலம் அணுப்பீடு மற்றும் விநியோக முறைமையைப் பலப்படுத்தி மின்சார முறைமையின் நம்பகத் தன்மையை விருத்தி செய்வதற்கும் மின்சார சேதங்களை குறைப்பதன் மூலம் இந்த பிரதேசத்தின் பொருளாதார அபிவிருத்தியை மேம்படுத்துவதற்கும் பங்களிப்பு நல்குவது இந்தக் கருத்திட்டத்தின் அடிப்படை நோக்கமாகும். மூன்று கொள்வனவு பொதிகளின் கீழ் நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள இந்த கருத்திட்டத்திற்கு யப்பான் சருவதேச ஒத்துழைப்பு நிறுவனத்தினால் 15.9 பில்லியன் யப்பான் யென்கள் கொண்ட கடன்தொகையொன்றை வழங்குகின்றது. இதற்கமைவாக, இந்த கருத்திட்டத்தின் நெய்யரி துணைநிலையங்களை நிருமாணித்தல் மற்றும் அணுப்பீட்டு மற்றும் விநியோக முறைமைகளை நிருமாணித்தல் என்பவற்றுக்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் உரிய கேள்விதாரர்களுக்கு வழங்கும் பொருட்டு மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.