• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-02-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஆசிய - பசுபிக் வலய கமத்தொழில் ஆராய்ச்சி நிறுவன சங்கங்கள் - இலங்கை கமத்தொழில் ஆராய்ச்சி கொள்கை சபையின் உறுப்புரிமைக் கட்டணத்தை அதிகரித்தல்
- ஆசிய - பசுபிக் வலயத்தின் கமத்தொழில் ஆராய்ச்சி அபிவிருத்திக்கு உதவுவது ஆசிய - பசுபிக் வலய கமத்தொழில் ஆராய்ச்சி நிறுவன சங்கத்தின் நோக்கமாகும். இலங்கை கமத்தொழில் ஆராய்ச்சி கொள்கை சபையானது 1988 ஆம் ஆண்டிலிருந்து இந்த சங்கத்தில் உறுப்புரிமையைக் கொண்டுள்ளதோடு, அதன் உறுப்புரிமை வகுப்பீட்டுக்கு அமைவாக இலங்கை தொகுதி "சீ" யில் உள்ளது. இந்த சங்கத்தின் மூலம் பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் நிபுணத்துவ ஆலோசனைகள் பெருமளவில் எவ்வித மேலதிக கொடுப்பனவுமின்றி வருடாந்த பங்களிப்புத் தொகையின் மீது மாத்திரம் வழங்கப்படுகின்றமையினால் கூடிய நலன்களைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு மேற்போந்த சங்கத்தில் இலங்கை கமத்தொழில் ஆராய்ச்சி கொள்கை சபையின் உறுப்புரிமையை "சீ" தொகுதியிலிருந்து "பீ" ​தொகுதி வரை தரமுயர்த்தும் பொருட்டு கமத்தொழில் அமைச்சர் துமிந்த திசாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.