• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-02-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஐக்கிய நாடுகள் உணவு மற்றும் கமத்தொழில் அமைப்பின் கீழான ஆசிய பசுபிக் தாவர பாதுகாப்பு ஆணைக்குழு சார்பில் இலங்கை அரசாங்கத்தின் உறுப்புரிமையை இற்றைப்படுத்திக் கொள்ளல்
- தாவரப் பாதுகாப்பு பற்றிய செயற்பாடுகள் மற்றும் பொறுப்புகள் சம்பந்தமாக ஆசிய - பசுபிக் வலயத்திற்குள் நிறுவப்பட்டுள்ள மேற்குறிப்பிட்ட வலய ஒத்துழைப்பு அமைப்பானது சருவதேச தாவரப் பாதுகாப்பு சமவாயத்தின் கீழ் தாபிக்கப்பட்ட வலய தாவரப் பாதுகாப்பு அமைப்புகளில் ஒன்றாகும். தாவரப் பாதுகாப்பு சம்பந்தமாக அந்தந்த நாடுகள் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகளை ஆராய்ந்து கலந்துரையாடுவதற்காக இந்த அமைப்பினால் வாய்ப்பு வழங்கப்படுகின்றது. இந்த அமைப்பில் உறுப்புரிமை பெற்றுள்ள நாடொன்றாக இலங்கை அரசாங்கத்தினால் இந்த ஆணைக்குழுவின் உறுப்புரிமையை இற்றைப்படுத்தி உரிய அங்கத்துவ தொகையை செலுத்துவதற்காக கமத்தொழில் அமைச்சர் துமிந்த திசாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.