• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-02-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பட்டதாரி பயிலுநர் திட்டம்
- இலங்கையில் அரசாங்க சேவைக்கு ஆரம்ப காலத்தில் பட்டதாரிகள் நேரடியாக ஆட்சேர்ப்புச் செய்யப்பட்டதோடு, 1964 ஆம் ஆண்டு வரை பட்டதாரிகள் அனைவருக்கும் அரசாங்க தொழில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தொழிலற்ற பட்டதாரிகளுக்கான பட்டதாரி பயிலுநர் திட்டமானது 1971 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு, காலத்துக்கு காலம் அதிகாரத்துக்கு வந்த பல்வேறுபட்ட அரசாங்கங்கள் பட்டதாரி பயிலுநர் திட்டத்தின் கீழ் பட்டதாரிகளை அரசாங்க சேவைக்கு ஆட்சேர்ப்புச் செய்துள்ளன. 2005 ஆம் ஆண்டில் 900,642 ஆகவிருந்த அரசாங்க சேவையின் உள்ளபடியான மொத்த பதவியணியானது 2014 ஆம் ஆண்டிலே 1,302,258 வரை துரித வளர்ச்சியை காட்டுகின்றதோடு, இந்த காலப்பகுதிக்குள் 88,609 பட்டதாரிகள் 'அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்' ஆக அரசாங்க சேவைக்கு ஆட்சேர்ப்புச் செய்யப்பட்டுள்ளார்கள். தொழில் வாய்ப்பின்மைக்கு மாற்று வழியாக பட்டதாரிகளை இவ்வாறு அரசாங்க சேவைக்கு ஆட்சேர்ப்புச் செய்ததன் மூலம் அவர்களிடமிருந்து எதிர்பார்க்கப்படும் சேவையை பெற்றுக் கொள்ள முடியாத நிலை உருவாகியுள்ளது. இதற்கமைவாக, நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்பினை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, அரசதுறை பதவியணி தேவையை மீளாய்வு செய்ததன் பின்னர், தற்போது ஆட்சேர்ப்புச் செய்யப்பட்டுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்களை மிக பயனுள்ள வகையில் சேவையில் ஈடுபடுத்துவதற்கும் இதன் பின்னர் சேவையின் தேவை நிமித்தம் இனங்காணப்படும் பதவிகளில் நிலவும் வெற்றிடங்களுக்கு மாத்திரம் நடைமுறை சவால்களுக்கு ஏற்றவாறு அரசாங்க சேவையை நடாத்திச் செல்வதற்குத் தேவையான விடய அறிவும் திறமையும் கொண்ட பட்டதாரிகளை போட்டி பரீட்சை முடிவுகளின் மீது மாத்திரம் அரசாங்க சேவைக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கும் அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.