• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-02-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
1991 ஆம் ஆண்டின் 37 ஆம் இலக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு சட்டத்தின் 40(உ) ஆம் பிரிவைத் திருத்துதல்
- மேற்போந்த சட்டத்திலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் தேசிய பத்திரிகைகளில் அறிவித்தல்கள் பிரசுரிக்கப்பட்டு போட்டி விலைகளின் கீழ் விண்ணப்பங்கள் கோருவதன் மூலம் மாகாணங்களுக்கிடையிலான வீதிகளில் பஸ் வண்டிகளின் போக்குவரத்துக்காக பிரயாணிகள் சேவை அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படுகின்றன. ஆயினும், செல்லுபடியான பிரயாணிகள் சேவை அனுமதிப்பத்திரங்களின்றி பெருமளவிலான பஸ் வண்டிகள் நாட்டின் மாகாணங்களுக்கிடையிலான வீதிகளில் போக்குவரத்துக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளமை அறிக்கையிடப் பட்டுள்ளதோடு, இது பிரயாணிகள் போக்குவரத்து பஸ் சேவைக்கும் அதேபோன்று பொது மக்களுக்கும் பாதகமான நிலைமையொன்றாகும். இந்த பாதகமான நிலைமையிலிருந்து பிரயாணிகளை விடுவித்துக் கொண்டு தரம்மிக்க பஸ் சேவையொன்றை உருவாக்கும் நோக்குடன் செல்லுபடியாகும் பிரயாணிகள் போக்குவரத்து அனுமதிப்பத்திரமொன்று இன்றி பஸ் வண்டிகளை போக்குவரத்துக்காக உபயோகப்படுத்துபவர்களுக்கு எதிராக நீதவான் நீதிமன்ற மொன்றினால் விதிக்கக்கூடியதும் தற்போது நடைமுறையிலுள்ளதுமான உச்சத் தண்டப் பணத்தை 10,000/- என்னும் எல்லையிலிருந்து 200,000/- ரூபா வரை அதிகரிப்பதற்காக 1991 ஆம் ஆண்டின் 37 ஆம் இலக்க இலங்கை தேசிய போக்குவரத்து ஆணைக்குழு சட்டத்தின் 40(உ) ஆம் பிரிவைத் திருத்தும் பொருட்டு போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.