• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-02-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை அரசாங்கத்திற்கும் ஜேர்மன் பெடரல் குடியரசின் Heidelberg பல்கலைக்கழகத்தின் துணை தெற்கு ஆசிய நிறுவனத்திற்கும் ஜேர்மன் கல்வி பரிமாற்றல் சேவைக்கும் இடையில் செய்து கொள்ளப்படும் புரிந்துணர்வு உடன்படிக்கை
- ஜேர்மன் பெடரல் குடியரசின் Heidelberg பல்கலைக்கழகத்தின் தெற்கு ஆசிய நிறுவனத்தில் "இலங்கை கற்கைகள்" பிரிவொன்றைத் தாபிப்பதற்கும் இலங்கை போதனாசிரியர்களை நியமிப்பதற்கும் பிரேரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இலங்கைக்கும் ஜேர்மனுக்குமிடையில் பல்கலைக்கழக விரிவுரையாளர்களை கல்வி மற்றும் ஆராய்ச்சி நோக்கங்களுக்காக பரிமாற்றிக் கொள்வதற்கும்கூட பிரேரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக இந்தப் பிரேரிப்புகளை நடைமுறைப்படுத்தும் பொருட்டு, இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சுக்கும் முறையே ஜேர்மன் பெடரல் குடியரசின் Heidelberg பல்கலைக்கழகத்தின் துணை தெற்கு ஆசிய நிறுவனத்திற்கும் ஜேர்மன் கல்வி பரிமாற்றல் சேவைக்கும் இடையில் இரண்டு புரிந்துணர்வு உடன்படிக்கைகளை அதிமேதகைய சனாதிபதி அவர்களின் ஜேர்மனுக்கான அண்மைய விஜயத்தின் போது கைச்சாத்திடும் பொருட்டு உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.