• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-02-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கொழும்புத் துறைமுக விரிவாக்கல் கருத்திட்டம் - கிழக்கு கொள்கலன் அந்தலையின் அபிவிருத்தி மற்றும் கையாள்கை விருப்பத்தெரிவு
- கொழும்புதுறைமுக விரிவுபடுத்தல் கருத்திட்டத்தின் ஆழ்கடலிலுள்ள இரண்டாவது கொள்கலன் அந்தலையானது கிழக்கு கொள்கலன் அந்தலையாகும். இலங்கை துறைமுக அதிகாரசபையின் உரிமையின் கீழ் இந்த அந்தலையின் கையாள்கை பணிகளைச் செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதோடு, அதற்காக இலங்கை துறைமுக அதிகாரசபை 51 சதவீத உரிமையுடன் கப்பல் கம்பனியொன்றுடன் அல்லது தனியார் கொள்கலன் கையாள்கை செயற்பாட்டாளருடன் கூட்டுத் தொழில்முயற்சியொன்றாக கொள்கலன் அந்தலை கையாள்கைப் பணிகளை ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டுள்ளது. இந்த கருத்திட்டத்தின் செயற்பாட்டு மதியுரைஞராக ஆசிய அபிவிருத்தி வங்கியை நியமிப்பதற்கும் கருத்திட்டத்திற்கு ஊக்கமுள்ள அபிப்பிராயத்தைக் குறிப்பிடும் பிரேரிப்புகளையும் வர்த்தக பிரேரிப்புகளையும் அழைப்பதற்குமாக துறைமுகங்கள், கப்பற்றுறை அமைச்சர் அர்ஜூன ரணதுங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.