• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-02-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சுற்றுலா மேம்பாட்டு சேவையொன்றாக கொழும்பு கால்வாய் முறைமையின் ஊடாக போக்குவரத்து முறையொன்றை அறிமுகப்படுத்துதல்
- 43 கிலோ மீற்றர் நீளமான கொழும்பு கால்வாய் முறைமையானது தற்போது இலங்கை காணி நில மீட்பு, அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தினால் பராமரிக்கப்பட்டு வருகின்றது. பல வருடங்களாக பயனுள்ள நோக்கங்கள் எவற்றுக்கும் பயன்படுத்தப்படாத இந்த கால்வாய் முறைமையை பொருட்கள் மற்றும் பிரயாணிகளின் போக்குவரத்துக்காக பயன்படுத்தி வாகன நெரிசலைக் குறைப்பதற்கும் சுற்றுலாத்துறை மேம்பாட்டுக்காக பயன்படுத்துவதற்குமான சாத்தியம் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இதற்கமைவாக கொழும்பு கால்வாய் முறைமை ஊடாக நடைமுறைப்படுத்தப்படும் போக்குவரத்து முறைமையொன்றை அறிமுகப்படுத்துதல், படகுகளைப் பயன்படுத்தி கால்வாயில் நீர்சார்ந்த களியாட்ட செயற்பாடுகளை அறிமுகப்படுத்துதல், கால்வாய் ஊடாக மிதக்கும் விற்பனை நிலையங்கள் போன்ற வர்த்தக செயற்பாடுகளை அறிமுகப்படுத்துதல் என்பன சம்பந்தமான கருத்திட்டமொன்றை இலங்கை காணி நில மீட்பு, அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தினால் நடைமுறைப்படுத்தும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.