• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-02-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கைத்தொழில் பிணக்கு சட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட நடுத்தீர்ப்பாளர்களுக்கும் தொழில் நீதிமன்ற உறுப்பினர்களுக்கும் விசாரணைகளின் பொருட்டு வழங்கப்படும் கட்டணங்கள் தொடர்பிலான ஒழுங்குவிதிகளை திருத்துதல்
- விசாரணைகளை நடாத்துவதற்காக நடுத்தீர்ப்பாளர்களுக்கும் தொழில் நீதிமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்கப்படும் கட்டணங்களை அவர்களுடைய தொழில் தேர்ச்சிகளுக்கேற்றவாறு திருத்தும் தேவையை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, அது சம்பந்தமாக தற்போது அமுலிலுள்ள 2008‑03‑28 ஆம் திகதியிடப்பட்டதும் 1542/35 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட கட்டளைகளைத் திருத்தும் பொருட்டு தொழில் மற்றும் தொழில்சங்க உறவுகள் அமைச்சர் டபிள்யு.டீ.ஜே.செனெவிரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.