• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-02-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஆசிய பசுபிக் வலய சிவில் விமான சேவைகள் பணிப்பாளர் அதிபதிகளின் 53 ஆவது சம்மேளனம் - 2016 ஆகஸ்ட் மாதத்தில் இலங்கையில் நடாத்துதல்
- அந்தந்த நாடுகளுக்குள்ளும் அதேபோன்று நாடுகளின் எல்லைகளுக்கூடாகவும் மேற்கொள்ளப்படுகின்ற விமான போக்குவரத்து நடவடிக்கைகளின் பாதுகாப்பான, முறையான மற்றும் வினைத்திறன் மிக்க செயற்பாட்டினை உறுதிப்படுத்துவதற்காக சிவில் விமான சேவைகளுக்குரிய சருவதேச சட்டங்கள் மற்றும் தரங்கள் சம்பந்தமாக பொதுவான நிலைப்பாட்டிலிருந்து கூட்டாக நடவடிக்கை எடுக்கும் நோக்கில் ஆசிய பசுபிக் வலயத்திற்குரிய நாடுகளைச் சேர்ந்த சிவில் விமான சேவைகள் ஒழுங்குறுத்தல் அதிகாரசபைகளில் தலைமை வகிக்கும் சிவில் விமானசேவைகள் பணிப்பாளர் அதிபதிகள் 1960 ஆம் ஆண்டிலிருந்து வருடாந்தம் சம்மேளனங்களை நடாத்தி வருகின்றனர். சருவதேச சிவில் விமானசேவைகள் அமைப்பின் ஆசிய பசுபிக் வலய அலுவலகங்களின் வருடாந்த செயற்பாடுகள் அதன் நிகழ்ச்சித் திட்டத்தில் முதன்மை வகிக்கும் மிக முக்கியமான சந்திப்பு இந்த சம்மேளனமாகும். ஆசிய பசுபிக் வலய சிவில் விமான சேவைகள் பணிப்பாளர் அதிபதிகளின் 53 ஆவது சம்மேளனம் "எந்தவொரு நாட்டையும் கைவிடாது சுற்றாடல் நட்புறவுமிக்க சூழலில் பாதுகாப்பானதும் வினைத்திறன் மிக்கதுமான விமானசேவை முறைமையொன்றை உருவாக்குதல்" என்னும் தொனிப்பொருளின் கீழ் 2016 ஆகஸ்ட் மாதம் 01 ஆம் திகதியிலிருந்து 05 ஆம் திகதிவரை இலங்கையில் நடாத்துவதற்கு போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.