• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-02-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அறுவை சிகிச்சைப் பிரிவொன்றை நிருமாணித்தலும் மருத்துவ உபகரணங்களை வழங்குதலும்
- மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மூலம் கிழக்கு மாகாணத்தில் வசிக்கும் 2 மில்லியனுக்கு மேற்பட்ட மக்களுக்கும் அருகாமையிலுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கும் சேவை வழங்கப்படுகின்றது. இந்த மாகாணத்திற்கு 2015 ஆம் ஆண்டில் இந்த வைத்தியசாலைக்கு 95,959 நோயாளிகள் தங்கி சிகிச்சைப் பெறுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, இதில் 36,463 அதாவது 40 சதவீதம் அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டிய நோயாளிகளாவர். குறித்த ஆண்டில் வைத்திசாலையில் செய்யப்பட்டுள்ள அறுவை சிகிச்சைகளின் எண்ணிக்கை 18,378 ஆகும். ஆயினும், இந்த வைத்தியசாலையில் அறுவை சிகிச்சைக்காக தற்போது நிலவும் உட்கட்டமைப்பு வசதிகளை நவீன தொழினுட்பத்துடனான வசதிகளுடன் மேம்படுத்த வேண்டியுள்ளது. இதற்கமைவாக, நோயாளிகளுக்கு மிக சிறந்த தரம் மிக்க சுகாதார சேவையொன்றை வழங்கும் நோக்கில் இந்திய அரசாங்கத்தின் உதவியின் கீழ் 275 மில்லியன் ரூபாவாக மதிப்பிடப்பட்ட செலவில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு 360 படுக்கைகளையும் அறுவை தீவிர சிகிச்சை பிரிவில் 10 படுக்கைகளும் 3 சத்திர சிகிச்சை கூடங்களும் கொண்ட அறுவை சிகிச்சை மருத்துவ பிரிவொன்றை நிருமாணிப்பதற்காகவும் மருத்துவ உபகரணங்களை வழங்குவதற்குமான கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொருட்டும் அதற்குரிய புரிந்துணர்வு உடன்படிக்கையை இலங்கை அரசாங்கத்திற்கும் இந்திய அரசாங்கத்திற்குமிடையில் கைச்சாத்திடும் பொருட்டு பதில் சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் மொஹமட் காசிம் மொஹமட் பைசல் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.