• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-02-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2016 - 2018 காலப்பகுதிக்கு கொரிய EXIM வங்கியின் பொருளாதார அபிவிருத்தி ஒத்துழைப்பு நிதியத்திலிருந்து கடன் பெற்றுக் கொள்வது சம்பந்தமாக கொரிய குடியரசுக்கும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசுக்கும் இடையில் பணிக் கட்டமைப்பு உடன்படிக்கை
- இருநாடுகளுக்குமிடையில் நிலவும் நட்புறவு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு ஆகியவற்றை மேலும் பலப்படுத்தும் நோக்கில் 2016 ஆம் ஆண்டிலிருந்து 2018 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியினுள் இருநாடுகளினதும் அரசாங்கங்களினால் பரஸ்பரம் உடன்படும் கருத்திட்டங்களுக்குத் தேவைப்படும் நிதி வழங்கும் பொருட்டு 300 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களை விஞ்சாத கொரிய வொன் கடன் தொகையொன்றை கொரிய EXIM வங்கியின் பொருளாதார அபிவிருத்தி ஒத்துழைப்பு நிதியத்தின் ஊடாக இலங்கைக்கு வழங்குவதற்கு கொரிய அரசாங்கம் உடன்பாடு காணப்பட்டுள்ளது. இதற்கமைவாக, இந்தக் கடன் தொகையைப் பெற்றுக் கொள்வதற்கு கொரிய அரசாங்கத்துடன் கட்டமைப்பு உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்ளும் பொருட்டு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக பிரதம அமைச்சர் மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.