• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-02-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
UNITERRA தன்னார்வ ஒத்துழைப்பு நிகழ்ச்சித்திட்டம்
- UNITERRA என்பது கனடாவில் உலக பல்கலைக்கழக சேவை மற்றும் சருவதேச கல்வி, ஒத்துழைப்பு நிறுவனம் என்பன மூலம் கூட்டாக நடைமுறைப்படுத்தப்படும் தன்னார்வ ஊழியர் ஒத்துழைப்பு மற்றும் சருவதேச அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டமொன்றாகும். இந்த நிகழ்ச்சித்திட்டம் 2016-2020 காலப்பகுதியினுள் இலங்கையில் நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதோடு, உத்சே நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் சேவைகள் மற்றும் புடவைக் கைத்தொழில் போன்ற துறைகளுக்குரியதாக நடைமுறைப்படுத்தப்படும் 2016-2020 காலப்பகுதியினுள் சுமார் 80,000 பயனாளிகள் தழுவப்படும் விதத்தில் நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படும் இந்த நிகழ்ச்சித்திட்டத்திற்கு கனடா அரசாங்கத்தினால் 2.7 மில்லியன் கனேடிய டொலர்களை செலவு செய்யவுள்ளது. மேற்போந்த நிகழ்ச்சித்திட்டத்தை இலங்கையில் நடைமுறைப்படுத்துவதற்கு கனடா அரசாங்கத்துடன் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை செய்து கொள்ளும் பொருட்டு தே.சிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக பிரதம அமைச்சர் மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.