• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-02-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஆட்கடத்தல் வியாபாரத்தை கண்காணிப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்குமான தேசிய மூலோபாய திட்டம் - 2015-2019
- "தற்கால யுகத்தில் அடிமைமுறை" என அழைக்கப்படும் "ஆட்கடத்தல் வியாபாரம்" பண்பட்ட உலகம் எதிர்க்கும் கடுமையான குற்றமொன்றாகும். முக்கியமாக பெண்கள், சிறுவர்கள் உட்பட ஆட்கள் வியாபாரத்தை தடுத்தல், ஒடுக்குதல் மற்றும் அதற்கு தண்டனை விதித்தல் என்பவற்றுக்கான ஐக்கிய நாடுகளின் சமவாயமானது 2015 ஆம் ஆண்டிலே இலங்கையினால் செயல்வலுவாக்கம் அளிக்கப்பட்டது. இந்த சமவாயத்தின் மூலம் ஆட்கடத்தல் வியாபாரத்தை தடுப்பதற்கும் அதற்கு எதிராக செயற்படுதல், இந்த வியாபாரத்திற்கு ஆளானவர்களை உடல் ரீதியிலும் உள ரீதியிலும் தேற்றுதல், அவர்களை மீண்டும் சமூகமயப்படுத்துதல், இந்த நோக்கங்களை வெற்றி கொள்ளும் பொருட்டு அரசாங்கங்களுக்கிடையில் ஒத்துழைப்பை பலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. இதற்கமைவாக, ஆட்கடத்தும் பாரிய குற்றத்தை தடுப்பதற்கு பல்புடை அணுகு முறையொன்றை இணங்கியொழுகும் முக்கியத்துவத்தை இனங்கண்டு ஆட்கடத்தல் வியாபாரத்திற்கு எதிராக தேசிய செயலணியினால் தயாரிக்கப்பட்ட "ஆட்கடத்தல் வியாபாரத்தை தடுத்தல் மற்றும் மேற்பார்வை செய்தல் தொடர்பிலான ஐந்து (05) வருடகால (2015-2019) தேசிய மூலோபாய திட்டமானது” நீதி அமைச்சர் (கலாநிதி) விஜேதாச ராஜபக்‌ஷ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.