• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-02-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கையில் வலுசக்தி துறையின் ஒத்துழைப்பு மற்றும் நிலையான அபிவிருத்தியின் பொருட்டு இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அமைச்சுக்கும் ஜேர்மன் குடியரசின் பொருளாதார அலுவல்கள் மற்றும் வலுசக்தி அமைச்சுக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை
- புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மின்பிறப்பாக்கல் கருத்திட்டங்களை அபிவிருத்தி செய்தல், தேசிய மின்சார முறைமைக்கு புதுப்பிக்கத்தக்க வலுசக்தியிலிருந்து பெறுப்படும் மின்சார ஆற்றலை அபிவிருத்திக்குரியதான ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளல், புதுப்பிக்கத்தக்க வலுசக்தியின் மீதான மின்சார உற்பத்திக்காகப் பயன்படுத்தப்படும் இயந்திர சாதனங்கள் மற்றும் உபகரணங்களை மேம்படுத்துதல், இந்த இயந்திர சாதனங்கள் மற்றும் உபகரணங்களை உள்நாட்டு மூலப்பொருட்களைக் கொண்டு உற்பத்தி செய்தல், அனல்மின் உற்பத்திக்கு சுற்றாடல் நட்புறவுமிக்க தொழினுட்பங்களை அறிமுகப்படுத்துதல், புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அபிவிருத்திக்குரிய பயிற்சி மற்றும் கல்வி போன்ற ஒத்துழைப்பு துறைகளைக் கொண்ட இலங்கையின் வலுசக்தி துறையில் ஒத்துழைப்பு மற்றும் நிலைபேறுடைய அபிவிருத்திக்கான புரிந்துணர்வு உடன்படிக்கை இந்த ஆண்டில் 16 ஆம் 17 ஆம் திகதிகளில் அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் ஜேர்மன் குடியரசுக்கு மேற்கொள்ளவுள்ள உத்தியோகபூர்வ விஜயத்தின் போது இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அமைச்சுக்கும் ஜேர்மன் குடியரசின் பொருளாதார அலுவல்கள் மற்றும் வலுசக்தி அமைச்சுக்கும் இடையில் கைச்சாத்திடும் பொருட்டு மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.