• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-02-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
1970 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க ஹோமியோபதி சட்டத்தை இரத்துச் செய்து அதற்குப் பதிலாக புதிய சட்டமொன்றை அங்கீகரிப்பித்துக் கொள்ளல்
- 1970 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க ஹோமியோபதி சட்டத்தை இரத்துச் செய்து அதற்குப் பதிலாக புதிய சட்டமொன்றுக்கு அமைச்சரவையினால் ஏற்கனவே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக ஹோமியோபதி மருத்துவ சபையைத் தாபித்தல், ஹோமியோபதி மருத்துவ தொழில்சார்பாளர்கள் மற்றும் ஹோமியோபதி மருந்தாளர்களைப் பதிவு செய்தல், ஹோமியோபதி நிறுவனங்களைப் பதிவு செய்தல் மற்றும் ஒழுங்குறுத்துதல், ஹோமியோபதி வைத்திய முறையை மேம்படுத்துதல், வளம் சேர்த்தல் மற்றும் ஒழுங்குறுத்துதல் போன்ற விடயங்களுக்கான ஏற்பாடுளைச் செய்து சட்டவரைநரினால் வரையப்பட்ட ஹோமியோபதி சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.