• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-02-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தேசிய விஞ்ஞான நிலையமொன்றை தாபித்தல்
- விஞ்ஞான, தொழினுட்ப மற்றும் புத்தாக்கத்தின் ஊடாக இலங்கையை வளம் மிக்க நாடொன்றாக கொண்டு செல்லும் பொருட்டு நாட்டிலுள்ள மக்களை பலப்படுத்தும் மற்றும் ஊக்குவிக்கும் விதத்தில் நவீன காட்சிப் பொருட்கள் மற்றும் சர்வதேச தரம்வாய்ந்த வசதிகளைக் கொண்ட "தேசிய விஞ்ஞான அடையாளம்" ஆக தேசிய விஞ்ஞான நிலையமானது மாலம்பேயில் நிருமாணிப்பதற்கு பிரேரிக்கப்பட்டுள்ள விஞ்ஞான நகரத்தில் தாபிக்கப்படும். இயற்கையின் வனப்பு, கமத்தொழில், பூமி, காலநிலை மாற்றம் மற்றும் இயற்கை அனர்த்தங்கள், மனித உடல் அமைப்பு, கைத்தொழில்மயம் மற்றும் தொழினுட்ப மாற்றங்கள், வான்வௌி மற்றும் விஞ்ஞானம், உள்நாட்டு மற்றும் பாரம்பரிய அறிவு, விஞ்ஞானத்துறை போன்ற துறைகள் தொடர்பில் ஒழுங்கமைக்கப்படும் கண்காட்சிகூடங்களைக் கொண்ட இலங்கை தேசிய விஞ்ஞான நிலையத்தை தாபிக்கும் பொருட்டு விஞ்ஞான, தொழினுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.