• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-01-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஆசிய அபிவிருத்தி வங்கியினால் நிதியளிக்கப்படும் இணைந்த வீதி முதலீட்டு நிகழ்ச்சித்திட்டம் - சப்பிரகமுவ மாகாணத்தின் இரண்டு கிராமிய வீதி சிவில் வேலை ஒப்பந்தப் பொதிகளை வழங்குவதற்கு அங்கீகாரம் கோருதல்
- ஆசிய அபிவிருத்தி வங்கி நிதியிடலின் கீழ் மேற்போந்த வீதி அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவ தோடு, இதன்கீழ் தெற்கு, சப்பிரகமுவ, மேல், மத்திய, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட வீதிகள் அபிவிருத்தி செய்யப்படும். இதற்கமைவாக சப்பிரகமுவ மாகாணத்தின் கேகாலை மாவட்டத்தின் 143 கிலோ மீற்றர் கிராமிய வீதிகளை புனரமைக்கும் பொருட்டிலான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனம் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் வழங்கும் பொருட்டு உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.