• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-01-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தேசிய இயந்திரசாதனங்கள் மற்றும் உபகரணங்கள் அமைப்பை மீளமைத்தல்
- நிருமாணிப்புக் கைத்தொழில் பொருளாதார ரீதியில் நிலையான அடிப்படையில் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்துவதற்காக பொருத்தமான உபகரணங்களையும் இயந்திரசாதனங்களையும் வழங்கும் நோக்குடன் தேசிய இயந்திரசாதனங்கள் மற்றும் உபகரணங்கள் அமைப்பானது 1991 ஆம் ஆண்டில் தாபிக்கப்பட்டது. முன்னாள் பிராந்திய மற்றும் கிராம மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி பணிகளை நிறைவேற்றிய மாவட்ட செயலாளர்கள் / அரசாங்க அதிபர்கள், பிரதேச செயலாளர்கள், உள்ளூராட்சி நிறுவனங்கள், கிராமோதய சபைகள், சமூக அபிவிருத்தி அமைப்புகள் மற்றும் சிறிய அளவிலான தனியார் ஒப்பந்தக்காரர்கள் ஆகியோர்களுக்கிடையில் இந்த நிறுவனத்தின் உபகரணங்கள் மற்றும் இயந்திரசாதனங்களை பெற்றுக்கொள்வதில் கடும் கேள்வி நிலவியதோடு, இந்த உபகரணங்கள் மற்றும் இயந்திரசாதனங்கள் 54 டிபோக்களின் ஊடாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தன. அதன் பின்னர், 2011 ஆம் ஆண்டில் இந்த நிறுவனம் அரசாங்க பொறியியல் கூட்டுத்தாபனத்தின் கீழ் கொண்டுவரப்பட்டதோடு, இந்த இரண்டு (02) நிறுவனங்களினதும் நோக்கங்கள் ஒன்றுக்கொன்று முரண்பட்டதன் காரணமாக இந்த நிறுவனம் வீழ்ச்சி கண்டுள்ளது. ஆதலால், 1992 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்டவாறு புறம்பான முகாமைத்துவக் குழுவொன்றின் மூலம் நிருவகிக்கப்படும் நிறுவனமொன்றாக தேசிய இயந்திரசாதனங்கள் மற்றும் உபகரணங்கள் அமைப்பை மீளமைக்கும் பொருட்டு வீடமைப்பு மற்றும் நிருமாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.