• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-01-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
களனி வலதுகரை நீர்வழங்கல் கருத்திட்டத்தின் II ஆம் கட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான நிதியுதவியைப் பெற்றுக் கொள்தல்
- நாளொன்றில் களனி வலதுகரை நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் மூலம் 180,000 கனமீற்றர் உச்ச கொள்ளவு மட்டத்தில் கொழும்புக்கு வடக்கே அமைந்துள்ள நகர பிரதேசங்களுக்கு நீர் வழங்கப்படுகின்றது. இந்தப் பிரதேசங்கள் தற்போது விரைவாக அபிவிருத்தி அடைந்திருத்தல், விமான நிலையங்கள், பியகம மற்றும் கட்டுநாயக்க ஏற்றுமதி பதனிடல் நிலையங்கள், பாதுகாப்பு பிரிவுகளின் கட்டடங்கள் தாபிக்கப்பட்டிருத்தல் போன்றவை காரணமாக நீருக்கான கேள்வி அதிகரித்துள்ளது. ஆதலால், இந்த நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் கொள்ளளவை அதிகரிக்கும் பொருட்டு 180,000 கனமீற்றர் நீர் சுத்திகரிப்பு நிலையமொன்றை புதிதாக நிருமாணித்தல், சுத்திகரிக்கப்பட்ட நீரை விநியோகிப்பதற்கான பிரதான குழாய் வழிகளை நிருமாணித்தல், 25 கிலோ மீற்றர் நீளமான நீர் அணுப்பீட்டு வழியொன்றை நிருமாணித்தல், வீ ஓயா நீர்தேக்கத்தை நிருமாணித்தல் மற்றும் உவர்நீர் பாதுகாப்புக்காக இறப்பர் பலூன் பெற்றுக் கொள்தல் மற்றும் தாபித்தல் என்பன உள்வாங்கப்பட்ட உட்கட்டமைப்பு வசதிகளைச் செய்யும் பொருட்டு சுமார் 96 மில்லியன் யூரோக்களை கொண்ட கடன் வசதியொன்றைப் பெற்றுக் கொள்வதற்காக பிரான்ஸ் Credit Agricole Corporate and Investment வங்கியுடன் உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்ளும் பொருட்டு நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.