• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-01-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கைக்கான தேசிய கனிம வளம் பற்றிய கொள்கை
- இலங்கையிலுள்ள பல்வேறுபட்ட கனிம வளங்களின் அளவு, அவை பரந்துள்ள விதம் என்பன தொடர்பில் தற்போது முறையான ஆவணமொன்று இல்லை. இந்த வளங்களைப் பயன்படுத்தி பெறுமதிகூடிய உற்பத்திகளை உற்பத்தி செய்தல், அவற்றை பயன்படுத்துவதற்கான தொழினுட்ப முறைகள் தொடர்பிலான ஆற்றலை அதிகரித்திருத்தல் போன்ற விடயங்கள் காரணமாக இந்த வளங்களின் பெறுமதி அதிகரித்துள்ளது. இலங்கையிலுள்ள கனிம வளங்களில் பெரும்பாலானவை பெறுமதி சேர்க்கப்படாது ஏற்றுமதி செய்யப்படுவதோடு, இதன் விளைவாக இந்த வளங்களினூடாகப் பெற்றுக் கொள்ளக்கூடிய உச்ச பொருளாதார நன்மைகள் எமக்குக் கிடைக்காமல் போயுள்ளது. புல்மோட்டைப் பிரதேசத்தில் கிடைக்கக்கூடிய இல்மனைட் கிலோகிராம் ஒன்றுக்கு 40/= ரூபா கிடைக்கின்ற போதிலும் இதற்கு ரைற்ரேனியம் டயொக்சைட் என்னும் மருத்துவ விஞ்ஞானப் பெறுமதி சேர்க்கப்பட்டவிடத்து கிலோகிராமொன்றுக்கு அண்ணளவாக 450,000/= ரூபா கொண்ட விலையினைப் பெற்றுக் கொள்ளமுடியும். மேற்போந்த விடயங்களைக் கவனத்திற்கு எடுத்துக்கொண்டு உள்நாட்டு கனிம வளங்களுக்குப் பெறுமதி சேர்க்கப்படாது நாட்டிலிருந்து கொண்டு செல்வதனை நிறுத்தும் நோக்கில் இலங்கைக்கான தேசிய கனிம வளம் பற்றிய கொள்கையொன்றை தயாரிக்கும் பொருட்டு அமைச்சரவை உபகுழுவொன்றை நியமிப்பதற்காக விஞ்ஞான, தொழினுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.