• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-01-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தேசிய கட்டடங்கள் ஆராய்ச்சி அமைப்புக்கு சட்ட அந்தஸ்தை வழங்குதல்
- அரசாங்க பொறியியல் கூட்டுத்தாபனத்தின் கீழ் இயங்கிய கட்டடங்கள் ஆராய்ச்சி நிறுவனத்தினதும் கட்டடங்கள் திணைக்களத்தினதும் மண் பரிசோதனைக் கூடத்தை இணைத்து 1984 ஆம் ஆண்டிலே தேசிய கட்டடங்கள் ஆராய்ச்சி அமைப்பானது தாபிக்கப்பட்டது. அதன் பின்னர், 1993 ஆம் ஆண்டில் வீடமைப்பு மற்றும் நிருமாணத்துறை அமைச்சின் கீழ் நிருமாணிப்பு, பயிற்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனமானது புறம்பான அமைப்பொன்றாக மீள் தாபிக்கப்பட்டது. இந்த அமைப்பு அடிப்படையில் அதன் வருமானத்தின் மீது கொண்டு நடாத்தப்படும் நிறுனமொன்றானதோடு, மண்சரிவு மற்றும் புவியியல் மாற்றங்கள் முகாமைத்துவத்தின் போது தேசிய மையநிலையமாகவும் செயற்படுகின்றது. 25 வருடகால அனுபவம் கொண்ட இந்த அமைப்புக்கு சட்ட அங்கீகாரத்தை வழங்குவதன் மூலம் இந்த அமைப்பினால் ஆற்றப்படும் சேவைகளை மிக சிறந்த நிலையில் நிறைவேற்றுவதற்கான ஆற்றல் அதற்கு கிடைக்கும், இலங்கையில் அவதானம் மிக்க பிரதேசங்களை இனங்காணுதல், முன்னறிவுப்புகளை வழங்குதல், மண்சரிவு அபாய மதிப்பீட்டு அறிக்கைகளை வழங்குதல், மதியுரைச் சேவைகளை வழங்குதல், சேதங்களை மதிப்பிடுதல் போன்ற சேவைகளை வழங்கும் இந்த அமைப்பானது "தேசிய கட்டடங்கள் ஆராய்ச்சி நிறுவனம்" என பெயர் குறித்து பாராளுமன்ற சட்டமொன்றின் மூலம் தாபிப்பதற்காக சட்டமூலமொன்றை வரையும் பொருட்டு அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.