• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-01-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கட்டுநாயக்கா பண்டாரநாயக்க சருவதேச விமானநிலைய அபிவிருத்திக் கருத்திட்டம் - கட்டம் II படிநிலை 2
- அரசாங்கத்தினால் நாட்டின் துரித பொருளாதார அபிவிருத்தியின் பொருட்டு எடுக்கப்பட்டுள்ள ஆரம்ப நடவடிக்கைகளுக்கு ஒருங்கிணைவாக உலக நாடுகளுடன் மிக சிறந்த உறவினைக் கட்டியெழுப்புவதற்காகவும் சுற்றுலா தொழிலை மேம்படுத்தும் பொருட்டும் கட்டுநாயக்கா பண்டாரநாயக்க சருவதேச விமானநிலையத்தின் பயணிகள் கையாள்கை தொடர்பிலுள்ள ஆற்றலை விரிவுபடுத்துவது அத்தியாவசிய மானதொன்றாகும். இதற்கமைவாக, கட்டுநாயக்கா பண்டாரநாயக்க சருவதேச விமானநிலையத்தின் பயணிகள் கையாளும் ஆற்றலை விரிவுபடுத்தும் நோக்கில் செயற்படுத்தப்பட்டுள்ள 180,000 சதுர மீற்றர்கள் கொண்ட பயணிகள் முனைவிடக் கட்டடமொன்றை நிருமாணித்தல், அதற்கு செல்வதற்காக உயரமான பாதையொன்றை நிருமாணித்தல், மின்சாரம், நீர், கழிவு அகற்றும் முறைமை, வாகனத்தரிப்பிடம் துணை ஓடுபாதை உட்பட ஏனைய உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குதல் என்பன உள்ளடங்கும் விதத்தில் கட்டுநாயக்கா பண்டாரநாயக்க சருவதேச விமானநிலைய அபிவிருத்திக் கருத்திட்டம் - கட்டம் II படிநிலை 2 க்குத் தேவையான நிதியினை பெற்றுக் கொள்ளும் பொருட்டு யப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்துடன் கடன் உடன்படிக்கையொன்றை செய்து கொள்ளும் பொருட்டு போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.