• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-01-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஐக்கிய நாடுகள் உலக உணவு நிகழ்ச்சித்திட்டத்தை 2016 - 2017 ஆண்டுகாலப் பகுதிக்குள் நடைமுறைப்படுத்துதல்
- 1968 ஆம் ஆண்டிலிருந்து உலக உணவு நிகழ்ச்சித்திட்டமானது இலங்கை அரசாங்கத்துடன் ஒத்துழைப்பு ரீதியில் முறையாக செயற்படுவதற்கு ஆரம்பிக்கப்பட்டதோடு, அது முதல் இந்த நிகழ்ச்சித்திட்டத்தினால் போசாக்கு, நிலைபேறுடைய அபிவிருத்தி, காலநிலை மாற்றங்கள், உணவுப் பாதுகாப்பு போன்ற துறைகளுக்குரிய பல்வேறுபட்ட நிகழ்ச்சித்திட்டங்களை இலங்கையில் நடைமுறைப்படுத்தி வருகின்றது. உணவுப் பாதுகாப்பு சம்பந்தமாக நிலவும் பிரச்சினைகளையும் போசாக்குக் குறைபாட்டினை அடியோடு இல்லாதொழிக்கும் பொருட்டும் இயைபுள்ள அமைச்சுக்களும் நிறுவனங்களும் இந்த நிகழ்ச்சித்திட்டத்துடன் இணைந்து 2016 ஆம் 2017 ஆம் ஆண்டுகளுக்கான கூட்டுப் பிரேரிப்பொன்றை தயாரித்துள்ளதோடு, இந்த நிகழ்ச்ச்சித்திட்டத்தின் கீழ் சலுகைகளை வழங்கும் பொருட்டு, வடக்கு, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களைத் தழுவும் விதத்தில் 11 மாவட்டங்கள் இனங்காணப்பட்டுள்ளன. இதற்கமைவாக, இந்த நிகழ்ச்சித்திட்டத்தை 2016 - 2017 ஆகிய இரண்டு (02) வருட காலப்பகுதி நடைமுறைப்படுத்தும் பொருட்டு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.