• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-01-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கையில் தடயவியல் நிறுவனங்களினதும் அதன் உத்தியோகத்தர் களினதும் திறன்விருத்திக் கருத்தி்ட்டம்
- நவீன தடயவியலில் பிரதானமான மூலக்கூறுகள் இரண்டாகக் கருதப்படும் இலக்கமுறை ஆதாரங்கள் மற்றும் மரபணு பரிசோதனை என்பன பெரும்பாலான குற்றவியல் புலனாய்வுகளின்போது முக்கிய பங்கினை வகிக்கின்றன. இதற்கமைவாக, நாட்டில் இலக்கமுறை ஆதாரங்கள் மற்றும் மரபணு பரிசோதனை மேற்கொள்ளும் ஆற்றலை விரிவுபடுத்தும் பொருட்டு இந்த துறைகளுக்குரியதாக அரசாங்க பகுப்பாய்வுத் திணைக்களத்தினதும் குற்றவியல் பரிசோதனை திணைக்களத்தினதும் ஆற்றலை மேம்படுத்துவதற்கான கருத்திட்டமொன்று கொரிய சருவதேச ஒத்துழைப்பு முகவராண்மையினால் வழங்கப்படும் 3.2 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களுக்குச் சமமான மானியமொன்றின் கீழ் முன்னெடுக்கப்படுமென தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்கள் அமைச்சரவையினால் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.